அக்டோபர் / புரட்டாசி மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்”.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் ஒவ்வொரு மாத அனுஷத்தன்றும் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஸ்ரீமடத்தில் நடைபெறும்..
புரட்டாசி / அக்டோபர் மாதம் 07.10.2024 காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாபெரியவா, புதுபெரியவா அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.
புரட்டாசி மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக வழங்கியவர்கள்.
1) சென்னை மயிலாப்பூரில் இருக்கும் சாந்தி – சிவசுப்ரமணியன் குடும்பத்தினர் – காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மடபள்ளி கைங்கர்யம் செய்திடும் வெங்கடேசன் – ரேணுகா தம்பதியர்களின் மகள் சக்தி என்ற பெண்ணின் திருமணத்திற்கு வழங்கினார்கள்.
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்த பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா விக்ரகம் வழங்கினோம்…மேலும் அவர்களது ஆத்மார்த்தமான பிரார்த்தனையை பெரியவா விரைவில் நடத்தி கொடுத்து அனுக்கிரகம் செய்வார்..
காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.
நவராத்திரி விஷேஷ காலம் என்பதால் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்ய பக்தர்களுக்கு நவாபரண பூஜை தரிசனம் செய்து அம்பாள் பிரசாதமும் வழங்கப்பட்டது.
ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஒவ்வொரு மாத அனுஷதன்றும் மிக சிரத்தையாக நடைபெறுகிறது என்றால் எல்லாம் சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரமே.
ஶ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்🙏

