Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

திருவிளக்கு பூஜை

நம் ஆலய வழிபாட்டில் மிக
பழமையான வழிபாடுகளில் ஒன்று தான்
விளக்கு பூஜை.

ஆலயங்களில் செய்யப்படும் எந்த ஒரு செயலுக்கும் உயர்வு என்பதால் அதனுடன் திரு என்ற அடை மொழி கொண்டு அழைக்கப்படுவதே “திரு”+விளக்கு பூஜை.

நம் நாயன்மார்களும்,ஆழ்வார்களும் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர்.

தீபத்தின் தத்துவம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெறவே தீப வழிபாடு, திருவிளக்கு பூஜைகள்..

பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஒன்றாகவே இந்த தீபவழிபாடுகள் தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும்,
வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.

எனவே ஆலயங்களில் பெண்கள் அந்த அம்பாளின் உருவமாக குத்துவிளக்கை பாவித்து அம்மன் போல் அலங்காரமிட்டு அம்பாளை அதில் ஆவாகணம் செய்து பூஜை செய்வார்கள்..

திருவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் முப்பெரும் தேவியரின் திருவருளையும் பெறலாம்.

நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக சிதிலமடைந்த ஆலயங்களில் தொடர் வழிபாடுகள் செய்திட அந்த மக்களிடம் பக்தியை ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற திருவிளக்கு பூஜைகளை நடத்துகிறோம்… இதனால் அவர்களுக்கு பக்தி மேன்மேலும் அதிகரிக்கும் இதன் மூலம் அந்த ஆலயம் மீண்டும் சிதிலமடையாமல் அந்த ஆலய வழிபாடும் அவர்களின் பக்தி அதிகரிக்கும்…

நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஒவ்வொரு ஆலயத்திலும் ஆண்டு ஒரு முறை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts