Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

மேல பூண்டி ஸ்ரீபூலோகநாதர் ஆலயம்

கும்பகோணம், வலங்கைமான் வட்டம் , மேல பூண்டி என்ற கிராமத்தின் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கனக்கான மக்கள் கடந்து செல்லும் சாலையில் அமைந்து உள்ளது தான் இந்த ஸ்ரீசிவபிரியா சமேத ஸ்ரீபூலோகநாதர் ஆலயம்..

மிகவும் சிதிலமடைந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக பூஜை இல்லாமல் இருந்த ஆலயம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக உழவாரபணி மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது..

அஸ்திர ஹோமமும் நித்திய பூஜையும்

அஸ்திர ஹோமம் ஈஸ்வரனின் ஆயுதங்களை (அஸ்திரங்களை) மூலமாக கொண்டு செய்திடும் சக்திவாய்ந்த யாகம்.

நீண்ட நாள் வழிபாடு இல்லாமல் கிடந்த ஆலயத்தில் இந்த மிகவும் சிறப்பு வாய்ந்த அஸ்திர ஹோமம் செய்திடும் போதும் அங்கு இருந்த துஷ்ட விசயங்கள் விலகி அவ்வாலயம் மீண்டும் நிந்த பூஜை தொடங்கவும் விரைவில் திருப்பணி தொடங்கி கும்பாபிஷேகம் நடைபெற எல்லா தடைகளையும் விலக்கி தர மிக சிறப்ப்பான ஹோமம் ஆகும்.

நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக இது போன்று சிதிலமடைந்த ஆலயங்களை எடுத்து முதலில் செய்திடும் ஹோமம் ஆகும். மேலும் இதில் நம் நித்தியமும் கைங்கர்ய உறுப்பினர்கள் ஸங்கல்பத்துடன் செய்திடுகிறோம். இதன் பலன் நம் கைங்கர்ய உறுப்பினர்களின் திருமண தடை , எதிரிகள் தொல்லை, நீதிமன்ற வழக்குகள், மற்றும் தோஷங்கள் போன்றவற்றை நீக்கி நன்மைகளைத் தரும்

24.07.26 அனுஷம் + ஆடிவெள்ளி

அனுஷமும் ஆடி வெள்ளியும்

மேல பூண்டி ஸ்ரீசிவபிரியா சமேத ஸ்ரீபூலோகநாதர் ஆலயத்தில் வருகிற 24.07.2026 ஆடி வெள்ளியும், அனுஷமும் சேர்ந்து வரும் நன்னாளில் ஸ்வாமிக்கு கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், அஸ்திர ஹோமம் நடைபெற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அன்று முதல் அவ்வாலயத்தில் நித்திய பூஜை தொடங்கபடுகிறது..

இவ்வாலயத்தில் முதற்க்கட்டமாக மின்சார வசதியும், அபிஷேக ஜலத்திற்கு போர் போட வேண்டியும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts