Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

Sri Mangalya Kainkaryam

ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம்

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவா அனுக்கிரத்தில் நாம் பல கைங்கர்யங்களை நடத்தி கொண்டு இருக்கிறோம்..எந்த ஒரு செயலானாலும் ஸ்ரீமஹாபெரியவா உத்தரவாக கொடுத்தால் நாம் அதை செயல்படுத்துவோம்.இல்லையேல் நாம் அதை செய்வதில்லை அது எந்த ஒரு காரியமானாலும் அப்படியே.

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும் ஸ்ரீஜெயந்திர பெரியவா ஸ்ரீபால பெரியவா சங்கர விஜயேந்திர சரஸ்வதி, ஸ்ரீசத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடன் நம் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் சிறப்பாக 6 வது ஆண்டில் நடந்து கொண்டு இருக்கிறது.. பெரியவா அனுக்கிரத்துடன் இதுவரை 120 விவாஹத்திற்கு நாம் ஸ்ரீமாங்கலயம் கைங்கர்யம் வழங்கியுள்ளோம்.. கடந்த மாதம் ஸ்ரீமடத்திற்கு சென்ற போது பாலபெரியவா நம்மிடம் "" ரெம்ப நன்னா பண்றேள் தொடர்ந்து பண்ணுங்கோ, நாமும் இங்கே இருக்கிறவாளிடம் சொல்கிறோம்"" என்று பெரியவா அனுக்கிரகம் செய்தார்..அதுவே நம் பாக்கியம்..

Our Recent Works

ஸ்ரீமஹாபெரியவா வாக்கே நமக்கு ஆக்னை

ஒருநாள் ஒரு பக்தர் போன் செய்து என் மகளின் திருமணம் வைத்துள்ளேன். ஒரே மகள் ஆனால் அவள் திருமணத்தை நல்ல முறையில் செய்திட என்னிடம் போதுமான பணவசதி இல்லை. ஆனால், தற்போது ஒரு நல்ல வரன் அமைந்துள்ளார். ஆகவே இந்த திருமணத்தை நடத்திட விரும்புகிறேன். என் நண்பரிடம் இதை பற்றி சொல்லி கொண்டு இருந்தேன். அவர் தான் உங்களது எண் கொடுத்தால் தங்கள் என் மகளின் திருமணத்திற்கு உதவ வேண்டும் என்றார். பொதுவாக நம்மிடம் ஒரு விண்ணப்பம் வருகிறது என்றால் அது மஹாபெரியவா நமக்கிட்ட ஆக்னையாக கொண்டே செயல்படுவோம்.. மேலும் நாம் பல கைங்கர்யங்கள் செய்து வருகிறோம் ஆனால் திருமணத்திற்கு என எதுவும் செய்திடவில்லை இதுவே முதல் விண்ணப்பம்.

மறுநாள் காலை பூஜையை முடித்து பெரியவாவிடம் இதை பற்றி மனதில் நினைத்து கேட்க ‘’ஸ்ரீமாங்கல்யம்’’ கொடு என மனதில் உத்தரவு.சரி பெரியவா உத்தரவு அப்படியே செய்வோம்.ஆனால் உதவி கேட்டவர் ஸ்ரீமாங்ல்யம் என கேட்கவில்லை எப்படி நாம் ஸ்ரீமாங்கல்யம் தான் தருவோம் என சொல்வது அவர் அதை ஏற்கனவே தயார் செய்து இருந்தால் நாம் எப்படி பெரியவா உத்தரவை மீறி வேறு கொடுப்பது என பல யோசனையுடன் அன்றைய பணிகளை துவங்கினோம்.உதவி கேட்டவர் மீண்டும் அழைத்தார். அவரிடம் என்ன மாதிரி தேவை இருக்கு என்ன வாங்கி இருக்கிறீர்கள் என கேட்டோம். அவர் சொன்ன முதல் வார்த்தையே ஸ்ரீமாங்கல்யம் நீங்க தருவீங்க என என் நண்பர் சொன்னார். ஸ்ரீமாங்கல்யம் கிடைத்தால் போதும் என சொல்ல ஒரு நிமிடம் எம்மையும் அறியாமல் கண்ணில் நீர் வந்து விட்டது. ஆம் இதுவரை யாருக்கும் ஸ்ரீமாங்கல்யம் கொடுக்கவில்லை பின் எப்படி அவர் நாம் ஸ்ரீமாங்கல்யம் கொடுக்கிறோம் என சொல்லி இருப்பார்.. நம்மிடம் மஹாபெரியவாவும் ஸ்ரீமாங்கல்யம் கொடு என உத்தரவிட்டு உள்ளார் அது தான் பெரியவா. இந்த உலகில் யாரெல்லாம் அவரது பாதத்தை பற்றி தன் குறையை கஷ்டத்தை சொல்லி மன்றாடுகிறார்களோ அடுத்த ஜனமே அதனை தீர்த்து நான் உன் கூட இருக்கிறேன் என கருணை செய்யும் மஹாதெய்வம். சரி ஸ்ரீமாங்கல்யம் கொடுக்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமே. அதையும் அவரே செய்வார் ஆம்! அடுத்த நாள் நம் கைங்கர்யத்தில் உள்ள பத்மினி மாமி போன் செய்தார் நம் கைங்கர்யத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் எப்படி அனுப்ப வேண்டும் என்றார்.






நாம் ஸ்ரீமாங்கல்யம் தர இருப்பதை சொன்னோம் அடுத்த நிமிடம் அவர் மிகுந்த சந்தோஷத்துடன் நானே ஸ்ரீமாங்கல்யம் வாங்கி தருகிறேன், ஏற்கனவே நான் பெரியவாவிடம் ஸ்ரீமாங்கல்யம் தருவதாக பிரார்த்தனை வைத்து இருந்தேன் ஆகவே இந்த ஸ்ரீமாங்கல்யம் நானே தருகிறேன் என்றார். இது தான் மஹாபெரியவா. அதன்படியே ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்தால் அவர்களின் முறைபடி ஸ்ரீமாங்கல்யம் வாங்கி கொண்டு காஞ்சிபுரம் சென்றோம். தானம் கேட்டவரையும் காஞ்சிபுரம் வர சொல்லி ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும் ஸ்ரீசங்கரவிஜயேந்திர பாலபெரியவா அனுக்கிர ஆசியுடன் அவர்களிடம் ஸ்ரீமாங்கல்யம் வழங்கினோம்.ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும் ஆசியுடனும் அவர்களது மகள் திருமணம் கடந்த மார்ச் 13.03.2020 சிறப்பாக நடந்தேறியது.



ஒரு நிகழ்வால் ஒருவரின் பிரார்த்தனையையும் ஒருவரின் தேவையையும் பூர்த்தி செய்யும் தெய்வீக சங்கல்பம் இதற்கு நாமும் ஒர் துளியாக இருப்பதே பெரும் அனுக்கிரகம், இது தான் மஹாபெரியவா அற்புதம்.
பெரியவா சொன்னால் பின் நாம் ஏன் அதை பற்றி கலங்க வேண்டும்.. உடனடியாக அனைவரிடமும் பேசினோம். நல்லது செய்வோம் என முடிவு எடுத்தோம். அதன் படி குழுவிலும் பதிவிட்டோம் ஒரு சிலரை தவிர யாரும் ஒன்றும் சொல்லவில்லை. என்ன செய்வது நாம் வேறு மாத மாதம் ஒரு ஸ்ரீமாங்கல்யம் தானம் கொடுப்பதாக சொல்லி விட்டோம் எப்படி முடியும்.. இதனால் யாருக்கும் வருத்தம் கூடாது.. தருகிறேன் என்று சொல்லி விட்டு கொடுக்கவில்லை எனில் பாவம் வந்து சேருமே என்ன செய்வது பெரியவா என்று சில நாட்களாக குழப்பம். 22.05.2020 அமாவாசை அன்றைய தினம் காலை எழுந்ததும் மொபைலில் ஒரு பெரியவா படம் வந்தது அதில் பெரியவா படத்திற்கு கீழ் ஒர் வாசகம்.. "" எடுக்க நினைத்த முயற்சியை ஒருபோதும் கைவிடாதே உன்னோடு நான் இருக்கேன்"" அடுத்த ஜனம் நம்முள் இருந்த குழப்பம் அனைத்தும் தீர்ந்தது.. இந்த படத்தின் மூலம் பெரியவா உத்தரவு. உடனே எந்த குழப்பமுன்றி ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் பற்றி நம் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவா குழுவில் பதிவிட்டோம்..






இந்த ஸ்ரீமாங்கல்யம் தான கைங்கர்யம் ஒரு வருடத்திற்கு 12 பேர்க்கு மட்டுமே வாய்ப்பு. ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் இந்த ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யத்தில் பங்கெடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்க என நம் பெரியவா குழுவில் பதிவிட்டோம்..என்ன ஆச்சர்யம் அற்புதம் ஆம் எப்படி சொல்வது ஸ்ரீமஹாஸ்வாமிகளின் அற்புதத்தை அடுத்த சில நிமிடங்களில் ஒரு வருடத்திற்கு ஸ்ரீமாங்கல்யம் கொடுக்க பெரியவா பக்தர்கள் தயார். ஏன் அடுத்த 2022 வருடம் முழுவதும் கூட பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டார்கள். இது தான் நம் கருணை தெய்வம். இதற்காகவாக நாம் இத்தனை நாள் தயங்கினோம் என நமக்கே சற்று வருத்தமாக இருந்தது. இது போன்று எத்தனை அற்புதங்கள் செய்தும் நாம் அவரை இன்னும் முழுதாக ஏற்கவில்லையோ என மிக வருத்தமாகவே இருந்தது... இப்படியாக துவங்கியது தான் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம்..




ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிர ஆசிர்வாதத்துடன் மிகவும் ஏழ்மையான பெண்களின் திருமணத்திற்கு "" ஸ்ரீமாங்கல்யம் மாத மாதம் அனுஷதன்று தானமாக வழங்க ஸ்ரீமஹாபெரியவா ஆக்னை.. இந்த ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யத்தில் தாங்களும் பங்கெடுக்க ஒர் வாய்ப்பு, விரும்புவோர் தங்களது பெயர்,குடும்ப விபரம், தொழில், முகவரி அனைத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தானம் வழங்க முடியும்.தானம் வழங்க விரும்புபவர்கள் தங்களது விருப்பத்தினை பதிவு செய்து கொண்டு எந்த மாதம் வழங்க முடியும் என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டியது. தானம் வழங்க வேண்டிய நபர்கள், நாள் மற்ற விபரங்கள் முன்னரே தெரிவிக்கபடும் அன்று கண்டிப்பாக தாங்கள் நேரில் வர வேண்டும் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிர ஆசியுடன் தானம் வழங்க வேண்டும்..(ஒரு சில மிகவும் தவிர்க்க முடியாத காரணத்தினால் வர இயலவில்லை எனில் மாற்று ஏற்பாடுகள் செய்திடலாம்)


2020 வருடம் அனுஷத்தில் துவங்கிய ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிர ஆசிர்வாத்துடன் தற்போது 2024 ம் ஆண்டு ஜீன் மாதம் வரை சுமார் 121 க்கும் மேற்பட்ட ஏழை பெண்களின் திருமணத்திற்கு ஸ்ரீமாங்கல்யம் வழங்கி இருக்கிறோம். மாதம் ஒரு ஸ்ரீமாங்கல்யம் என்றது போக தற்போது மாதம் 3 ,4 என கொடுக்கும் அளவிற்கு பெரியவா அனுக்கிரகம். அனுஷம் என்றால் அன்று காலை ஸ்ரீமடத்தில் ஸ்ரீமாங்கல்யம் கொடுப்பார்கள் என்று ஆகிவிட்டது. ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம்.ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வழங்க இயலுமா என யோசித்ததற்கு இன்று ஸ்ரீமாங்கல்யம் வழங்கிட பெரியவா பக்தர்கள் 2027 ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்துள்ளார்கள்.

நாம் ஒவ்வொருமுறையும் சொல்வது போல் இந்த கைங்கர்யங்கள் அனைத்தும் நாம் நடத்தவில்லை நம் கருணாமூர்த்தி ஸ்ரீமஹாபெரியவா தான் நடத்தி கொண்டு இருக்கிறார்.

ஸ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்.