
JANUARY 2021
தை மாத ஶ்ரீ மாங்கல்யம் கைங்கரயம். ஶ்ரீமஹாபெரியவா அனுக்ரகத்தால் 18.01.2021 அன்று நடந்த திருமணம். 1) சென்னை ராஜாஅன்னாமலைபுரத்தை சேர்ந்த திருமதி சரஸ்வதி குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த ஜோதி ஐஸ்வர்யா (பெற்றோர் இருவரும் இல்லை) திருமணத்திற்கு அவருடைய உறவினரிடம் காஞ்சி ஶ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானத்தில் ஶ்ரீ பாலபெரியவா ஆசிர்வாதம் செய்து ஶ்ரீ மாங்கல்யம் வழங்கினார்கள். 2)திருநெல்வேலியை சேர்ந்த திருமதி சாந்தி அவர்களின் மகள் சபரி மஞ்சுளாவிற்கு நாகப்பட்டினத்தை சேர்ந்த திருமதி விஜயலக்ஷ்மி குடும்பத்தினர்,ஶ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானத்தில்,ஶ்ரீ பாலபெரியவா ஆசிர்வாதம் செய்து ஶ்ரீமாங்கல்யம் வழங்கினார்கள். ஶ்ரீ மஹாபெரியவாபாதமே சரணம்.

