Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ● ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். ● 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. ● 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். ● 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். ● 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். ● 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். ● 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். ● 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. ● 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ● ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். ● 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

MAY 2024

வைகாசி மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்”.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் ஒவ்வொரு மாத அனுஷத்தன்று காலை ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஸ்ரீமடத்தில் நடைபெறும்..

ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஸ்ரீமஹாபெரியவா அவர் காலத்தில் எப்படி பண்ணினாரோ அதை போலவே ஸ்ரீமாங்கல்யம் கொடுக்கிறவாளும் வாங்கிறவாளும் காஞ்சிபுரம் ஸ்ரீமடம் வந்து நம் ஆச்சார்யாள் ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்தில் பெரியவாளுக்கு சமர்பணம் செய்து பின்னர் கைங்கர்யம் .

வைகாசி / மே மாதம் 23.05.2024 ( வைகாசி அனுஷம் பெரியவா ஜெயந்தி என்பதால் முதல் நாள் )  காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாபெரியவா, புதுபெரியவா அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடன் 4 பெண்களின் திருமணத்திற்கு வழங்கினோம்.

வைகாசி மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக  வழங்கியவர்கள்.

1) மன்னார்குடி பூர்விகமாக பெங்களூரில் இருக்கும் வெங்கடகிருஷ்ணன் – லலிதா குடும்பத்தினர் -to- மதுரையில் ஆனந்தன்- மஹாலக்ஷ்மி தம்பதியினரின் மகள் அபயாம்பிகை திருமணத்திற்கு வழங்கினார்கள்.

2) சென்னையில் முரளிதரன்- பிரதிபா குடும்பத்தினர் -to-கும்பகோணம், செருகளத்தூர் சங்கர மடத்தில் கைங்கர்யம் செய்யும் இளங்கோவன்- சாவுத்திரி அவர்களின் மகன் பிரவின் திருமணத்திற்கு வழங்கினார்கள்.

3) திருவாருர் பூர்விகமாக சென்னையில் இருக்கும் அருணாச்சலம்- பானுமதி  குடும்பத்தினர் -to- சிவகங்கை ஆலய அர்ச்சகர் / பட்டாச்சார்யர் லக்ஷ்மி நாரயணன் திருமணத்திற்கு வழங்கினார்கள்.

4)பாண்டிச்சேரியில் இருக்கும் ஜெயகுமார் – கற்பகம் குடும்பத்தினர் -to- குடவாசல், நாலூரில் பெற்றோர் இல்லாமல் மிகவும் சிரமப்படும் வினோதா என்ற பெண்ணின் திருமணத்திற்கு வழங்கினார்கள்.*

நாம் எப்போதும் அனுஷதன்று ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்வது ஆனால் பெரியவா ஜெயந்தி, ஆராதனை காலங்களில் மடத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முதல் நாளே கொடுக்க பாலபெரியவா உத்தரவு அதன்படியே 23.05.24 வியாழன் அன்று குருவாரத்தில் வழங்கிட ஏற்பாடு செய்தொம்.

ஸ்ரீமாங்கல்ய கைங்கர்ய பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவாவின் விக்ரகம்  அதிஷ்டானத்தில் இருந்து வழங்கப்பட்டது..இந்த மாதம் ஒரு நாள் முன்னதாக நடைபெற்றதால் பெரியவா ஜெயந்தி அன்றே கைங்கர்ய பக்தர்களின் இல்லத்தில் பெரியவா ஜெயந்தி நடைபெற்றது இதுவே பெரும் பாக்கியமல்லவா..ஸ்ரீமஹாபெரியவா சிலாரூபமாக அவர்களது இல்லத்தில் அனுதினமும் அனுக்கிரகம் வழங்கிடுவார்.

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்த பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா அவர்களது ஆத்மார்த்த பிரார்த்தனையை பெரியவா விரைவில் நடத்தி கொடுக்கணும்.

ஸ்ரீமாங்கல்யம் பெற்றவர்கள் அவர்களது திருமணம் நல்ல முறையில் நடைபெற்று அந்த பெண்களின் வாழ்கை சிறப்பாக அமைய பெரியவா க்ருபாகடாஷம் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.

நித்தியமும் கைங்கர்யம் சார்பாக காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.

ஸ்ரீமாங்கல்ய கைங்கர்ய பக்தர்களின் சார்பாக சங்கல்பத்துடன் ஸ்ரீகாமாட்சி அம்பாள் உச்சிகால அபிஷேகம் நடைபெற்று அம்பாள் பிரசாதமும் வழங்கப்பட்டது.

ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஒவ்வொரு மாத அனுஷதன்றும் மிக சிரத்தையாக  நடைபெறுகிறது என்றால் எல்லாம் சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரமே.

“ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர”

“ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts