Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ● ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். ● 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. ● 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். ● 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். ● 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். ● 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். ● 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். ● 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. ● 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ● ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். ● 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

JUNE 2025

வைகாசி மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்.”

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் ஒவ்வொரு மாத அனுஷத்தன்றும் ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஸ்ரீமடத்தில் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது..எல்லாம் பெரியவா அனுக்கிரம்..

வைகாசி / ஜீன் மாதம் 10-06-2025 அனுஷதன்று காலை காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்திலும் ஸ்ரீபுதுபெரியவா அதிஷ்டானத்திலும்  சமர்பணம் செய்து பெரியவா அனுக்கிரத்துடனும் திருப்பதி சென்று ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடனும் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆசிர்வாதத்துடன்  இரண்டு பெண்களின் திருமணத்திற்கு  ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.

வைகாசி – ஜீன் மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக  வழங்கியவர்கள்.

1) கோயமுத்தூரில் இருக்கும் ஸ்ரீதர்-ராதிகா குடும்பத்தினர்  –to–சென்னையில் வைதீகத்தில் இருக்கும் பாலசுப்ரமணியன்- ராஜேஸ்வரி அவர்களின் மகள் வந்தனா  திருமணத்திற்கு வழங்கினார்கள்..

2) பாண்டிச்சேரியில் இருக்கும் இந்துமதி குடும்பத்தினர்  –to–சென்னையில் இருக்கும் கண்ணன்- விஜயலக்ஷ்மி அவர்களின் மகள் சிதாலக்ஷ்மி  திருமணத்திற்கு வழங்கினார்கள்.. நம் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஒவ்வொரு மாதமும் காஞ்சிபுரத்திலும் மடத்தில் பெரியவா இருந்தால் அவரது அனுக்கிரத்துடன் வழங்கி வருகிறோம். இந்த முறை பெரியவா திருப்பதியில் இருந்ததால் நாமும் காலை காஞ்சிபுரம் வந்து ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்தில் சமர்ப்பணம் செய்து அனுக்கிரக பிரசாதம் பெற்று பின்னர் அங்கிருந்தே திருப்பதி சென்று ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி பாலபெரியவா அனுக்கிரகமும், ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி இளைய பெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.

காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.

ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஒவ்வொரு மாத அனுஷதன்றும் மிக சிரத்தையாக  நடைபெறுகிறது என்றால் எல்லாம் சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரமே.

ஶ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts