ஆடி மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்”..
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் ஒவ்வொரு மாத அனுஷத்தன்று காலை ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஸ்ரீமடத்தில் நடைபெறும்..
ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஸ்ரீமஹாபெரியவா அவர் காலத்தில் எப்படி பண்ணினாரோ அதை போலவே ஸ்ரீமாங்கல்யம் கொடுக்கிறவாளும் வாங்கிறவாளும் காஞ்சிபுரம் ஸ்ரீமடம் வந்து நம் ஆச்சார்யாள் ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்தில் பெரியவாளுக்கு சமர்பணம் செய்து பின்னர் கைங்கர்யம் .
ஆடி / ஜீலை மாதம் 17.07.2024 காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாபெரியவா, புதுபெரியவா அனுக்கிரத்துடனும் ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.
ஆடி மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக வழங்கியவர்கள்.
1)கடலாழி சிங்கபெருமாள் கோவில் பூர்விகமாக USA இருக்கும் – பத்ரிநாரயணன் குடும்பத்தினர் -to- கோயமுத்தூரில் சமையல் பணி செய்திடும் சரவணன் – புவனேஸ்வரி தம்பதியினரின் மகள் காயத்ரி திருமணத்திற்கு வழங்கினார்கள்.
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்த பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா அவர்களது ஆத்மார்த்த பிரார்த்தனையை பெரியவா விரைவில் நடத்தி கொடுக்கணும்.
ஸ்ரீமாங்கல்யம் பெற்றவர்கள் அவர்களது திருமணம் நல்ல முறையில் நடைபெற்று அந்த பெண்களின் வாழ்கை சிறப்பாக அமைய பெரியவா க்ருபாகடாஷம் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.
நித்தியமும் கைங்கர்யம் சார்பாக காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.
ஸ்ரீமாங்கல்ய கைங்கர்ய பக்தர்களின் சார்பாக சங்கல்பத்துடன் ஸ்ரீகாமாட்சி அம்பாள் உச்சிகால அபிஷேகம் நடைபெற்று அம்பாள் பிரசாதமும் வழங்கப்பட்டது.
ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஒவ்வொரு மாத அனுஷதன்றும் மிக சிரத்தையாக நடைபெறுகிறது என்றால் எல்லாம் சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரமே.
“ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர”
“ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர”
ஶ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்🙏

