மாசி மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்.”
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் ஒவ்வொரு மாத அனுஷத்தன்றும் ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஸ்ரீமடத்தில் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
மாசி / பிப்ரவரி மாதம் 21.02.2025 அனுஷதன்று காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாபெரியவா, புதுபெரியவா அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடன் 2 பெண்களின் திருமணத்திற்கு ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.
மாசி மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக வழங்கியவர்கள்.
1) பெங்களூரில் உள்ள ஆனந்தி-ஸ்ரீநிவாசன் குடும்பத்தினர் – திருச்சியில் ஆலய பூஜை செய்யும் பெற்றோர் இல்லாத (சத்தியமூர்த்தி-மஹாலெட்சுமி) அவர்களின் புதல்வன் லோகநாதன் அவர்களின் திருமணத்திற்கு வழங்கினார்கள்.
2)சென்னை சிங்கபெருமாள்கோவில் பூர்விகமாக-USA வில் இருக்கும் கடலாழி ஸ்ரீபத்ரி நாரயணன்-லக்ஷ்மி கஸ்தூரி குடும்பத்தினர் குடும்பத்தினர்கள் –to–திருச்சியில் தந்தை இல்லாமல் மிகவும் சிரமபடும் (late-கணேசன்- சாந்தி) அவர்களின் மகன் சுரேந்தரின் திருமணத்திற்கு வழங்கினார்கள்..
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்த பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா விக்ரகம் வழங்கினோம்…மேலும் அவர்களது ஆத்மார்த்தமான பிரார்த்தனையை பெரியவா விரைவில் நடத்தி கொடுத்து அனுக்கிரகம் செய்வார்..
காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.
ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்ய பக்தர்களுக்கு சங்கல்பத்துடன் காமாட்சி அம்மன் அபிஷேகம் நடைபெற்று அம்பாள் தரிசனம் செய்து அம்பாள் பிரசாதமும் வழங்கப்பட்டது.
ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஒவ்வொரு மாத அனுஷதன்றும் மிக சிரத்தையாக நடைபெறுகிறது என்றால் எல்லாம் சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரமே.
மஹாபெரியவா பாதமே சரணம்🙏

