Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ● ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். ● 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. ● 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். ● 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். ● 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். ● 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். ● 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். ● 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. ● 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ● ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். ● 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

FEBRUARY 2024

தை மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்”.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன்  பிரதி மாத அனுஷம் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம்.

ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஸ்ரீமஹாபெரியவா வாழும் காலத்தில் எப்படி பண்ணினாரோ அது போன்றே காஞ்சிபுரம் பெரியவா அதிஷ்டானத்தில் ஸ்ரீமாங்கல்யம்  சமர்பணம் செய்து பின் கைங்கர்யம் பண்றவா நேரடியா வாங்கிறவாளுக்கு கைங்கர்யம் செய்திடுவார்.அவரது நேரடி பார்வையிலேயே ஸ்ரீமாங்கல்யம் தான கைங்கர்யம்..

இந்த தை மாத அனுஷத்தில் 04.02.2024 ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் 3 பெண்களின் திருமணத்திற்கு வழங்கினோம்

தை / பிப்ரவரி மாதம் 04.02.2024 காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீஸ்ரீமஹாபெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி-பால பெரியவா ஆசிர்வாதத்துடன் வழங்கினோம்.

தை மாதம் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக  வழங்கியவர்கள்.

1) சென்னையில் இருக்கும் ராம்பிரசாத் – வசந்தா குடும்பத்தினர் -to- சாத்தூர் ஆலய அர்ச்சகர் கணேசன்- அகிலாண்டேஸ்வரி அவர்களின் மகள் கிருத்திகா திருமணத்திற்கு வழங்கினார்கள்.

2)சென்னையில் இருக்கும் அருணாச்சலம்-லக்ஷ்மி குடும்பத்தினர் -to- சென்னையில் உள்ள ஆலய அர்ச்சகர் சந்திரசேகர்- பத்மாபிரியா அவர்களின் தங்கை வைஷ்ணவி திருமணத்திற்கு வழங்கினார்கள்.

3)மும்பையில் இருக்கும் பிரசாத் – கெளரி குடும்பத்தினர் -to- சென்னையில் இருக்கும் சங்கரகைலாசம் – கெளரி  அவர்களின் மகள் மினாட்சி திருமணத்திற்கு வழங்கினார்கள்.

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் இந்த மாதம் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்த குடும்பதார்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா அவர்களது ஆத்மார்த்த கோரிக்கைகளை பெரியவா விரைவில் நடத்தி கொடுக்கணும்..அதே போல இந்த மாதம் பெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் பெற்றவர்கள் அவர்களது திருமணம் நல்ல முறையில் நடைபெற்று அந்த பெண்களின் வாழ்கை அமோகமாக அமைய பெரியவா அனுக்கிரகம் செய்திடணும்..

“பெரியவா க்ருபாகடாஷம் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.”

ஸ்ரீரங்க பூமாலை கைங்கர்யமும், ஸ்ரீகாமாட்சி அம்பாள் அபிஷேக ஆராதனையும்.

ஸ்ரீபாலபெரியவா ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆக்னைபடி, நமது நித்தியமும் கைங்கர்யம் சார்பாக காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.

ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திடும் பெரியவா பக்தர்களுக்கு ஸ்ரீகாமாட்சி அம்பாளின் அனுக்கிரகமாக அவர்கள் சங்கல்பத்துடன் ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு அன்றைய உச்சிகால அபிஷேகம் நடைபெற்று அம்பாள் பிரசாதமும் வழங்கப்படுகிறது.

ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் பிரதி அனுஷதன்றும் மிக சிரத்தையாக  நடைபெறுகிறது என்றால் எல்லாம் அந்த சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம்  மஹாபெரியவா அனுக்கிரமே.

ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திடும் பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவாவின் விக்ரகம் பெரியவா அதிஷ்டானத்தில் இருந்து அவர்களுக்கு வழங்கப்படுகிறது..இத்தனை பெரும் கைங்கர்யம் செய்திட்ட அவர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா சிலாரூபமாக அவர்களது இல்லத்திற்க்கே சென்று அனுதினமும் அனுக்கிரகம் செய்திட போகிறார் என்பது அவர்களது அனுக்கிர பாக்கியமே..

“ஸ்ரீமஹாபெரியவா/ குரு பாதமே கோடி சரணம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts