Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ● ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். ● 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. ● 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். ● 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். ● 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். ● 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். ● 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். ● 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. ● 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ● ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். ● 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

November 21, 2026

MARCH 2024

மாசி மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்” ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன்  பிரதி மாத அனுஷத்தில் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம். ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஸ்ரீமஹாபெரியவா எப்படி பண்ணினாரோ அது போன்றே காஞ்சிபுரம் பெரியவா அதிஷ்டானத்தில் ஸ்ரீமாங்கல்யம் கொடுக்கிறவாளும் வாங்கிறவாளும் வந்து பெரியவாளுக்கு சமர்பணம் செய்து பின் கைங்கர்யம் பண்றவா நேரடியா வாங்கிறவாளுக்கு கைங்கர்யம் செய்திடுவார்..மஹாபெரியவா நேரடி பார்வையிலேயே ஸ்ரீமாங்கல்யம்  கைங்கர்யம் அனுக்கிரகம். மாசி / மார்ச் மாதம் 03.03.2024 அனுஷத்தில் காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீஸ்ரீமஹாபெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி-பால பெரியவா ஆசிர்வாதத்துடன் 3 பெண்களின் திருமணத்திற்கு வழங்கினோம் மாசி மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக  வழங்கியவர்கள். 1) சென்னையில் இருக்கும் முரளி-கங்கா குடும்பத்தினர் -to- சென்னையில் ஆலய அர்ச்சகர் சுரேஷ்- பத்மாவதி அவர்களின் பெண் ஸ்ரீவித்யா திருமணத்திற்கு வழங்கினார்கள். 2)கரூரில் இருக்கும் கருப்பன் செட்டி குடும்பத்தினர் -to- ஸ்ரீமடத்தில் கைங்கர்ய சேவை செய்திடும் குடும்பத்தினர்களான குமரேசன்- சரஸ்வதி அவர்களின் பெண் நர்மதா திருமணத்திற்கு வழங்கினார்கள். 3) கும்பகோணம் ஒப்பிலியப்பன் பூர்விகமாக சென்னையில் இருக்கும் சுதர்சன் – ரமாதேவி குடும்பத்தினர் -to- சென்னையில் இருக்கும் விஸ்வேஸ்வரன்- தனலெட்சுமி அவர்களின் பெண் காமாட்சி திருமணத்திற்கு வழங்கினார்கள். ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் இந்த மாதம் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்த குடும்பதார்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா அவர்களது ஆத்மார்த்த பிரார்த்தனையை பெரியவா விரைவில் நடத்தி கொடுக்கணும்..அதே போல இந்த மாதம் பெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் பெற்றவர்கள் அவர்களது திருமணம் நல்ல முறையில் நடைபெற்று அந்த பெண்களின் வாழ்கை அமோகமாக அமைய பெரியவா அனுக்கிரகம் செய்திடணும்.. “பெரியவா க்ருபாகடாஷம் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.” ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யமும், ஸ்ரீகாமாட்சி அம்பாள் அபிஷேக ஆராதனையும். ஸ்ரீபாலபெரியவா ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆக்னைபடி, நமது நித்தியமும் கைங்கர்யம் சார்பாக காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது. ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திடும் பெரியவா பக்தர்களுக்கு ஸ்ரீகாமாட்சி அம்பாளின் அனுக்கிரகமாக அவர்கள் சங்கல்பத்துடன் ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு அன்றைய உச்சிகால அபிஷேகம் நடைபெற்று அம்பாள் பிரசாதமும் வழங்கப்படுகிறது. ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் பிரதி அனுஷதன்றும் மிக சிரத்தையாக  நடைபெறுகிறது என்றால் எல்லாம் அந்த சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம்  மஹாபெரியவா அனுக்கிரமே. ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திடும் பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவாவின் விக்ரகம் பெரியவா அதிஷ்டானத்தில் இருந்து அவர்களுக்கு வழங்கப்படுகிறது..இத்தனை பெரும் கைங்கர்யம் செய்திட்ட அவர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா சிலாரூபமாக அவர்களது இல்லத்திற்க்கே சென்று அனுதினமும் அனுக்கிரகம் செய்திட போகிறார் என்பது அவர்களது அனுக்கிர பாக்கியமே.. “ஸ்ரீமஹாபெரியவா/ குரு பாதமே கோடி சரணம்”

Read More

FEBRUARY 2024

தை மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்”. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன்  பிரதி மாத அனுஷம் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம். ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஸ்ரீமஹாபெரியவா வாழும் காலத்தில் எப்படி பண்ணினாரோ அது போன்றே காஞ்சிபுரம் பெரியவா அதிஷ்டானத்தில் ஸ்ரீமாங்கல்யம்  சமர்பணம் செய்து பின் கைங்கர்யம் பண்றவா நேரடியா வாங்கிறவாளுக்கு கைங்கர்யம் செய்திடுவார்.அவரது நேரடி பார்வையிலேயே ஸ்ரீமாங்கல்யம் தான கைங்கர்யம்.. இந்த தை மாத அனுஷத்தில் 04.02.2024 ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் 3 பெண்களின் திருமணத்திற்கு வழங்கினோம் தை / பிப்ரவரி மாதம் 04.02.2024 காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீஸ்ரீமஹாபெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி-பால பெரியவா ஆசிர்வாதத்துடன் வழங்கினோம். தை மாதம் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக  வழங்கியவர்கள். 1) சென்னையில் இருக்கும் ராம்பிரசாத் – வசந்தா குடும்பத்தினர் -to- சாத்தூர் ஆலய அர்ச்சகர் கணேசன்- அகிலாண்டேஸ்வரி அவர்களின் மகள் கிருத்திகா திருமணத்திற்கு வழங்கினார்கள். 2)சென்னையில் இருக்கும் அருணாச்சலம்-லக்ஷ்மி குடும்பத்தினர் -to- சென்னையில் உள்ள ஆலய அர்ச்சகர் சந்திரசேகர்- பத்மாபிரியா அவர்களின் தங்கை வைஷ்ணவி திருமணத்திற்கு வழங்கினார்கள். 3)மும்பையில் இருக்கும் பிரசாத் – கெளரி குடும்பத்தினர் -to- சென்னையில் இருக்கும் சங்கரகைலாசம் – கெளரி  அவர்களின் மகள் மினாட்சி திருமணத்திற்கு வழங்கினார்கள். ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் இந்த மாதம் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்த குடும்பதார்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா அவர்களது ஆத்மார்த்த கோரிக்கைகளை பெரியவா விரைவில் நடத்தி கொடுக்கணும்..அதே போல இந்த மாதம் பெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் பெற்றவர்கள் அவர்களது திருமணம் நல்ல முறையில் நடைபெற்று அந்த பெண்களின் வாழ்கை அமோகமாக அமைய பெரியவா அனுக்கிரகம் செய்திடணும்.. “பெரியவா க்ருபாகடாஷம் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.” ஸ்ரீரங்க பூமாலை கைங்கர்யமும், ஸ்ரீகாமாட்சி அம்பாள் அபிஷேக ஆராதனையும். ஸ்ரீபாலபெரியவா ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆக்னைபடி, நமது நித்தியமும் கைங்கர்யம் சார்பாக காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது. ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திடும் பெரியவா பக்தர்களுக்கு ஸ்ரீகாமாட்சி அம்பாளின் அனுக்கிரகமாக அவர்கள் சங்கல்பத்துடன் ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு அன்றைய உச்சிகால அபிஷேகம் நடைபெற்று அம்பாள் பிரசாதமும் வழங்கப்படுகிறது. ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் பிரதி அனுஷதன்றும் மிக சிரத்தையாக  நடைபெறுகிறது என்றால் எல்லாம் அந்த சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம்  மஹாபெரியவா அனுக்கிரமே. ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திடும் பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவாவின் விக்ரகம் பெரியவா அதிஷ்டானத்தில் இருந்து அவர்களுக்கு வழங்கப்படுகிறது..இத்தனை பெரும் கைங்கர்யம் செய்திட்ட அவர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா சிலாரூபமாக அவர்களது இல்லத்திற்க்கே சென்று அனுதினமும் அனுக்கிரகம் செய்திட போகிறார் என்பது அவர்களது அனுக்கிர பாக்கியமே.. “ஸ்ரீமஹாபெரியவா/ குரு பாதமே கோடி சரணம்”

Read More

DECEMBER 2023

கார்த்திகை மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்”. ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகத்துடன் ஒவ்வொரு மாதமும் அனுஷதன்று ஏழை பெண்களின் திருமணத்திற்கு ஸ்ரீமாங்கல்ய தானம் கைங்கர்யம் செய்து வருகிறோம். இந்த கார்த்திகை மாத அனுஷத்தில் 12.12.2023 ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் 2 பெண்களின் விவாஹத்திற்கு வழங்கினோம். கார்த்திகை / டிசம்பர் மாதம் 12.12.2023 காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீஸ்ரீமஹாபெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி-பால பெரியவா ஆசிர்வாதத்துடன் வழங்கினோம். கார்த்திகை மாதம் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக  வழங்கியவர்கள். 1) சென்னையில் இருக்கும் சிதம்பரம் மகள் கல்யாணி – சுரேந்திரன் குடும்பத்தினர் -to- கோவில்பட்டி ஆலய அர்ச்சகராக சேதுராமன்- ஜெயஸ்ரீ அவர்களின் மகள் பூர்ணிமா திருமணத்திற்கு வழங்கினார்கள். 2)சென்னையில் தற்போது – USA யில் இருக்கும் பத்ரி குடும்பத்தினர் -to- செங்கல்பட்டு சுந்தரராமன்- கீதா  அவர்களின் மகள் மதுமிதா திருமணத்திற்கு வழங்கினார்கள். ஸ்ரீரங்கத்து மாலை கைங்கர்யம், ஸ்ரீகாமாட்சி அம்பாள் அபிஷேகமும் ஸ்ரீபாலபெரியவா ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆக்னைபடி : நமது நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஒவ்வொரு மாத அனுஷதன்றும் காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து பூமாலை கடந்த இரண்டு வருடமாக அனுப்பி வருகிறோம். ஸ்ரீகாமாட்சி அம்மனின் அனுக்கிரகமாக மாத மாதம் ஒவ்வொரு அனுஷதன்றும் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஏற்பாடு செய்து ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்வர்கள் அமர்ந்து சங்கல்பம் செய்து ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று அம்பாள் பிரசாதமும் வழங்கப்படும். எந்த தர்ம காரியங்களும் தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லாமல் நடைபெறவே இராது..அது போல் இது போன்ற ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம். என்ற பெரும் பாக்கியத்தை அதுவும் அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவருக்கு முன்னால் செய்திடும் பாக்கியம் எல்லாம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகம் இல்லாமல் நடைபெறுமா ஆகவே அவரது அனுக்கிரகம் என்றும் அவர்களுக்கு பூர்ணமாக இருக்கும்.. ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திடும் பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா விக்ரகம் பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து நேரடியாக அவர்களே வழங்கப்பட்டது. ஸ்ரீமஹாபெரியவா சிலாரூபமாக அவர்களது இல்லத்திற்கு அனுதினமும் அனுக்கிரகம் செய்திட அவர்களுடனே செல்கிறார் என்பதும் பாக்கியமே.. ஸ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்.

Read More

Latest Posts

Power of Presence

immerse yourself in the gentle embrace of full mindfulness.