வஸ்திரதான கைங்கர்யம்-2026
ஸ்ரீமஹாபெரியவா,ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி & ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடன் தீபாவளி திருநாளை நாம் சிறப்பாக கொண்டாட இருக்கிறோம்..
இந்த மகிழ்வான பண்டிகை காலத்தில் ஆலயத்தில் நித்திய பூஜை செய்து வரும் அர்ச்சகர்கள்,வைதீகர்கள்,ஆலய கைங்கர்யம் செய்திடும் அடியார்கள் என அவர்களுக்கும் ஒரு சிறிய உபகாரமாய் பண்டிகை நாளன்று உடுத்தி மகிழ நம்மால் ஆன ஒரு சிறு வஸ்திர கைங்கர்யம்.

பெரியவா அனுக்கிரத்துடன் ஒவ்வொரு வருடமும் இக் கைங்கர்யத்தை ஆத்மார்த்தமாக செய்து வருகிறோம்..இந்த ஆண்டும் இதே போன்று வழங்க ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகம் நம் பாக்கியம்.”
இதன் பலன் :- இறை சேவை செய்யும் அவர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் நாம் வழங்கும் ஒரு உடை ஒரு சின்ன மகிழ்வை கொடுக்கும்…ஏன் இவர்களில் ஒருவராக அந்த இறைவனும்,அம்பாளும் நம்மிடம் வாங்கி உடுத்தி மகிழலாம்…
2026 ஆம் ஆண்டு வஸ்திர கைங்கர்யம் உத்தேச திட்டம்..
ஸ்வாமி வஸ்திரம் 9 X 5 = 150
அம்பாள் வஸ்திரம்: 6 கஜம் புடவை = 150,
ஆலய அர்ச்சகர்கள் 9 x 5 வேஷ்டி
9 yards புடவை = 150
நம் கைங்கர்ய அடியார்கள் 8 முழம் வேஷ்டி -150 + புடவை 150
கிராம கோவில் பூசாரிகள் வேஷ்டி + துண்டு =150 ( காவி வேஷ்டி )
இவற்றின் “மதிப்பு 6 வரை லட்சம் ரூபாய் ஆகும் என எதிர்பார்க்கிறோம்”..வஸ்திர தான கைங்கர்யத்தில் பெரியவா பக்தர்கள் எப்போதும் போலவே இந்த ஆண்டும் பங்கெடுக்க விரும்புகிறோம்..
வஸ்திரமாக வழங்கிட விரும்பும் பக்தர்களுக்கு சிறு விண்ணப்பம்:-
“கொடுக்கும் தானமே கொடுப்பவரின் மனதை/அன்பை நிச்சயிக்கும்”…வஸ்திரம் “நாம் உடுத்துவதை போன்றே இருப்பது சிறப்பு…உடுத்தி மகிழ்வதை விட பார்த்ததும் மகிழ்ச்சி கண்ணில் தெரியும்..
நம் கைங்கர்ய வஸ்திரம் பெற வேண்டும் என்றே பலர் ஆவலுடன் காத்திருப்பர்.. இதுவரை அப்படியே பெரியவா அனுக்கிரகமாக..
“ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் வஸ்திர தானம் வழங்கிட பாக்கியம் பெற்ற பெரியவா பக்தர்கள்”பங்கெடுக்க தொடர்பு கொள்ளவும்..

