OCTOBER
Smt. Lalitha Ganesh
Shri. Ravi – Rajeshwari
2020 ஐப்பசி மாத அனுஷ ஶ்ரீமாங்கல்யம் கைங்கர்யம்
நாம் ஒவ்வொரு மாதமும் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்தால் அனுஷ தினத்தன்று ஸ்ரீமாங்கல்யம் வழங்கி வருகிறோம்…
இந்த ஐப்பதி மாத அனுஷ ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்தால் அவரது உத்தரவால் இரண்டு பேர்க்கு ஸ்ரீமாங்கல்யம் செய்திட உத்தரவு
இந்த மாத அனுஷ ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் லக்னோவை சேர்ந்த கணேஷ்- லலிதா மற்றும் புனே சேர்ந்த ரவி- ராஜேஸ்வரி அவர்களது கைங்கர்யமாக ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் இன்று காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்தில் பெரியவா அனுக்கிரத்துடன்
1) ஒருவர் டெல்லியை சேர்ந்த ராஜசேகரன்- ஜெயந்தி அவர்களது பெண் ரம்யா- நடராஜ் அவர்களுக்கு 29.102020 அன்று நடக்க இருக்கிற அவர்களது திருமணத்திற்கும்..
2) காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடத்தில் பல தலைமுறைகளாக பணி செய்துவரும் பழனியப்பன்- காமாட்சி அவர்களது பெண் தனலெட்சுமி-குமரேசன் அவர்களுக்கு 04.11.2020 அன்று நடக்க இருக்கிற திருமணத்திற்கும்
20.10.2020 அன்று அனுஷ தினத்த்தில் ஸ்ரீமாங்கல்யம் வழங்கினோம்.

நாம் ஏற்கனவே சொன்னது போல் ஒவ்வொரு மாதமும் ஸ்ரீமாங்கல்யம் தானம் கைங்கர்யம் வழங்க உள்ளவர்கள் காஞ்சிபுரம் ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்திற்கு அவசியம் வர வேண்டும். ஸ்ரீமஹாபெரியவாவிடம் ஆசிர்வாதம் பெற்று தங்களது கரங்களினால் ஸ்ரீமாங்கல்யம் வழங்க வேண்டும் என்பது நம் ஏற்கனவே முடிவு செய்தது…
ஸ்ரீலலிதா கணேஷ் அவர்கள் சார்பாக அவர்களது அம்மாவும், தங்கையும் இன்று மடத்தில் வந்திருந்தார்கள்.. அதுபோல் புனேவை சேர்ந்த ரவி- ராஜேஸ்வரி அவர்கள் இக் கைங்கர்யத்திற்காக புனேயில் இருந்து வந்திருந்தார்கள்..அதன்படி அவர்களது கரங்களல் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்தாலும் இன்று காலை இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் ஸ்ரீமாங்கல்யம் வழங்கப்பட்டது.

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் செய்திடும் பக்தர்கள்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா விக்ரகம் ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்தில் வைத்து பின் தாமரை-வில்வத்துடன் பிரசாதமாக அவர்களுக்கு வழங்கப்பட்டது..
கடந்த மாதங்களில் கைங்கர்யம் செய்தவர்களுக்கும் இன்று பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து எடுத்து வந்துள்ளோம்..விரைவில் அவரவர் இல்லத்திற்கும் பெரியவா வருவார்.

