சித்திரை மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்.”
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் பிரதி அனுஷம் ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது..
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம் பரிபூரணம்.
சித்திரை / மே மாதம் 05-05-2026 அனுஷம் அடுத்த நாள் காலை காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா,ஸ்ரீபுதுபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் & ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.
சித்திரை – மே மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக வழங்கியவர்கள்.
1)திண்டிவனம் பூர்விகமாய் சென்னையில் இருக்கும் ஸ்ரீ பரணிதரன்- சாய்லட்சுமி மாமி குடும்பத்தினர் -to– காரைக்குடியில் ஆலய பூஜை செய்திடும் சுப்ரமணியன்-தனலட்சுமி அவர்களின் மகள் ராஜேஸ்வரி திருமணத்திற்கு வழங்கினார்கள்..
ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்தில் ஸ்ரீமாங்கல்யம் சமர்ப்பணம் செய்து பின்னர் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி பாலபெரியவாவிடம் ஆசிர்வாதம் பெற்றோம்…
“”பெரியவா ஆசிர்வாதம் செய்து நன்னா பண்றேள் ரெம்பா நன்னா பண்ணுங்கோ, இங்கு நிறைய உங்களை பற்றி சொல்லி இருக்கோம் என்றார்””
நாம் செய்திடும் கைங்கர்யத்திற்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்…. ஆச்சார்யாள் ஆசிர்வாதமே பரமபாக்கியம்.
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திட்ட பெரியவா பக்தர்களுக்கு பெரியவா சிலாரூப விக்ரகம் அதிஷ்டானத்தில் இருந்துவழங்கப்பட்டது.
ஸ்ரீமஹாபெரியவா அவர்கள் ஆத்தில் இனி அமர்ந்து அனுக்கிரகம் செய்திட இருக்கிறார்..
நாம் இந்த ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பெரியவா ஆக்னையுடன் தொடங்கிய போது ஒரு கிராம் பவுன் விலை 3365/- மட்டுமே ஆனால் இன்று 15,000 மேல் சென்று விட்டது..இருப்பினும் இதில் எந்த தடைகளும் இல்லாமல் பவுன் எடை குறையாமல் அதே 4 கிராம் இன்று வரை கொடுத்து வருகிறோம்..எல்லாம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகமே..
காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.
ஶ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்🙏

