Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ● ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். ● 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. ● 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். ● 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். ● 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். ● 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். ● 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். ● 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. ● 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ● ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். ● 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

AUGUST 2025

ஆடி மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்.”

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் ஒவ்வொரு மாத அனுஷத்தன்றும் ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது..ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம் பரிபூரணம்.

ஆடி / ஆகஸ்டு மாதம் 04-08-2025 அனுஷதன்று காலை காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும், ஸ்ரீபுதுபெரியவா அனுக்கிரத்துடனும் அதிஷ்டானத்தில்  சமர்பணம் செய்து  ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடனும் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.

ஆடி – ஆகஸ்டு மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக  வழங்கியவர்கள்.

1)நன்னிலம் பூர்விகமாக தற்போது திருச்சியில் இருக்கும் நாரயணசாமி- லதா மாமி குடும்பத்தினர் -to–புதுக்கோட்டையில் ஆலய அர்ச்சகரான சுவாமிநாதன்-பத்மா   அவர்களின் மகள் அபிராமி  திருமணத்திற்கு வழங்கினார்கள்..

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திட்ட பெரியவா பக்தர்களுக்கு  பெரியவா சிலாரூப விக்ரகம் அதிஷ்டானத்தில் இருந்து வழங்கப்பட்டது..ஸ்ரீமஹாபெரியவா அவர்கள் ஆத்தில் அமர்ந்து அனுக்கிரகம் செய்திட இருக்கிறார்..

காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.

ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஒவ்வொரு மாத அனுஷதன்றும் மிக சிரத்தையாக  நடைபெறுகிறது என்றால் எல்லாம் சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரமே.

ஶ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts