சித்திரை மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்.”
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் ஒவ்வொரு மாத அனுஷத்தன்றும் ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஸ்ரீமடத்தில் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
சித்திரை / ஏப்ரல் மாதம் 16.04.2025 அனுஷதன்று காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாபெரியவா, புதுபெரியவா அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடன் 2 பெண்களின் திருமணத்திற்கு ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.
சித்திரை மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக வழங்கியவர்கள்.
1) குஜராத் பரோடாவில் உள்ள சுவாமிநாதன்- ராஜலக்ஷ்மி குடும்பத்தினர் – சென்னையில் மிகவும் சிரமபடும் மணிகண்டன் – கல்யாணி அவர்களின் புதல்வி சாய்லக்ஷ்மி அவர்களின் திருமணத்திற்கு வழங்கினார்கள்.
2) கும்பகோணம் குடவாசலில் இருக்கும் கணேசன் குடும்பத்தினர் –to–பருத்திசேரி கிராமத்தில் மிகவும் சிரமத்துடன் கிராம ஆலய பூஜை செய்திடும் நாரயணன்- விஜயலக்ஷ்மி அவர்களின் மகன் ஸ்ரீராமனின் திருமணத்திற்கு வழங்கினார்கள்..
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்த பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா விக்ரகம் வழங்கினோம்…மேலும் அவர்களது ஆத்மார்த்தமான பிரார்த்தனையை பெரியவா விரைவில் நடத்தி கொடுத்து அனுக்கிரகம் செய்வார்..
காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.
ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்ய பக்தர்களுக்கு சங்கல்பத்துடன் காமாட்சி அம்மன் அபிஷேகம் நடைபெற்று அம்பாள் தரிசனம் செய்து அம்பாள் பிரசாதமும் வழங்கப்பட்டது.
ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஒவ்வொரு மாத அனுஷதன்றும் மிக சிரத்தையாக நடைபெறுகிறது என்றால் எல்லாம் சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரமே.
ஶ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்🙏

