ஆகஸ்டு / ஆடி மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யமும் அதில் பெரியவா செய்த அற்புதமும்..
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் ஒவ்வொரு மாத அனுஷத்தன்றும் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஸ்ரீமடத்தில் நடைபெறும்..
ஆடி / ஆகஸ்டு மாதம் 14.08.2024 காஞ்சிபுரம் ஸ்ரீமடம் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாபெரியவா, புதுபெரியவா அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் 3 பெண்களின் திருமணத்திற்கு வழங்கினோம்.
ஆடி மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக வழங்கியவர்கள்.
1)சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ஸ்ரீராமசுப்ரமணியன் குடும்பத்தினர் – கோவில்பட்டி ஆலய அர்ச்சகர் பாலசுப்ரமணியன்-ஜெயராணி தம்பதியர்களின் மகள் ஆனந்தவள்ளி திருமணத்திற்கு வழங்கினார்கள்.
2)பெங்களுரை சேர்ந்த ஸ்ரீசுந்தரேசன்- புஷ்பா குடும்பத்தினர் – ஸ்ரீசுரேஷ்-பால சரஸ்வதி தம்பதியரின் மகள் வர்ஷா திருமணத்திற்கு வழங்கினார்கள்
3)சென்னையை சேர்ந்த ஸ்ரீவிஸ்வநாதன்- நாகலக்ஷ்மி குடும்பத்தினர் – காஞ்சிபுரம் கணபாடிகள் கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதியரின் மகள் விஷ்ணுபிரியா திருமணத்திற்கு வழங்கினார்கள்.
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்த பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவா விக்ரகம் வழங்கினோம்…மேலும் அவர்களது ஆத்மார்த்தமான பிரார்த்தனையை பெரியவா விரைவில் நடத்தி கொடுத்து அனுக்கிரகம் செய்வார்.
இந்த மாதம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஒரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கும் பெரியவாவிற்கு பிக்ஷாவந்தனம் செய்தோம்..
காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.
ஸ்ரீமாங்கல்ய கைங்கர்ய பக்தர்களின் சார்பாக சங்கல்பத்துடன் ஸ்ரீகாமாட்சி அம்பாள் உச்சிகால அபிஷேகம் நடைபெற்று அம்பாள் பிரசாதமும் வழங்கப்பட்டது.
ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஒவ்வொரு மாத அனுஷதன்றும் மிக சிரத்தையாக நடைபெறுகிறது என்றால் எல்லாம் சாட்ஷாத் பரமேஸ்வர அவதாரம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரமே.
“ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர”
“ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர”
ஶ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்🙏

