Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

பிக்ஷாவந்தனம்

॥ ஶ்ரீ குருப்யோ நமஃ ॥

॥ ஶ்ரீமஹாபெரியவா திருவடிகளே சரணம் ॥

குருபரம்பரை அனுக்ரஹத்தில்

சாதுர்மாஸ்ய விரத பிக்ஷாவந்தனம்

“குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுஃ
குருர் தேவோ மஹேஶ்வரஃ ।
குருஃ ஸாக்ஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஶ்ரீ குரவே நமஃ ॥”

பாரத தேஶத்தின் ஸனாதன தர்மம் தொன்றுதொட்டு நிலைத்து வருவதற்கு மூலாதாரமாக இருப்பவர்கள் நம் ஆசார்யர்களும், மடாதிபதிகளும், குருமார்களுமே. வேதம், வேதாந்தம், உபநிஷத்துகள் மற்றும் தர்ம ஸம்ப்ரதாயங்களைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து, லோக க்ஷேமத்திற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வருபவர்கள் நம் குருமார்கள்.

நம் குருபரம்பரையின் மஹாகுருவாக ஶ்ரீ வேதவ்யாஸ பகவான் போற்றப்படுகிறார். அவருடைய சீடர்களான பைலர், ஜைமினி, வைஶம்பாயனர், ஸுமந்து, அதன்பின் ஆதிஶங்கர பகவத்பாதர்கள் மற்றும் பத்மபாதர், ஸுரேஶ்வரர், ஹஸ்தாமலகர், தோடகர், மேலும் ஸனகர், ஸனந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர், நாரதர், ஶுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் ஆகிய மஹான்களும் குருபரம்பரையில் பூஜிக்கப்படுகின்றனர். இறுதியில் ஸுத்த சைதன்ய ஸ்வரூபமாக ஸாளக்ராமமும் ஆராதிக்கப்படுகிறது.

இவ்வாறு நடைபெறும் வியாஸ பூஜையும் குருபரம்பரை பூஜையும், நம் ஸனாதன தர்மத்தின் அகண்ட ஞானப் பரம்பரையை நினைவுகூரும் புனித அனுஷ்டானமாகும்.

சாதுர்மாஸ்ய விரதம்

எப்போதும் யாத்திரையாகச் செல்லும் ஸந்நியாஸிகள் பரிவ்ராஜகர்கள் எனப்படுகின்றனர். மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகுவதால், அவற்றிற்கு ஹிம்ஸை ஏற்படாதவாறும், வேத–வேதாந்த அத்யயனம், ஜபம், த்யானம், பூஜை ஆகியவற்றில் ஈடுபடுவதற்காகவும், ஒரே இடத்தில் தங்கி அனுஷ்டிக்கும் விரதமே சாதுர்மாஸ்ய விரதம்.

ஆஷாட பௌர்ணமியை ஒட்டி தொடங்கும் இப்புனித காலம், ஆசார்யர்களின் தபஸ், வேதநிஷ்டை, ஞானநிஷ்டை மற்றும் லோக க்ஷேம ப்ரார்த்தனைகளுக்கு உரிய காலமாகும்.

ஆசார்ய பிக்ஷாவந்தனம்

சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் ஆசார்யர்களை தர்ஶனம் செய்து, நமஸ்கரித்து, அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரிய கைங்கர்ய பாக்யம்.

இது வெறும் அன்ன சமர்ப்பணம் அல்ல; குரு ஸேவை, அன்னதானம், வேத ஸேவை, தர்ம ஸேவை அனைத்தும் ஒன்றிணையும் புனித கைங்கர்யமாகும்.

ஆசார்யர்களின் அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் நம் குடும்பங்களில் கல்வி, கலை, ஞானம், ஐஶ்வர்யம், மங்களம் மற்றும் க்ஷேமம் பெருகுவதற்கு அருளாக அமையும் என்பது நம் ஸம்ப்ரதாய நம்பிக்கை.

ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம்

நம் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீ ஶங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், காஞ்சிபுரம் ஒரிக்கை ஶ்ரீமஹாபெரியவா மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்கள்.

ஶ்ரீமஹாபெரியவா அனுக்ரஹத்துடன்,
நித்தியமும் கைங்கர்யம் சார்பாக
ஒரு நாள் சாதுர்மாஸ்ய விரத பிக்ஷாவந்தன கைங்கர்யம் செய்ய உள்ளோம்.

இப்புனித கைங்கர்யத்தில் பங்களிக்க விரும்பும் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு பங்களித்து, குரு ஸேவையில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மேலும், பிக்ஷாவந்தனம் நடைபெறும் நாளன்று அனைவரும் ஒரிக்கை வந்து ஆசார்ய தர்ஶனம் செய்து, குரு அனுக்ரஹ ஆசீர்வாதம் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

“ஸர்வம் குருசரணார்ப்பணம்”
“லோகாஃ ஸமஸ்தாஃ ஸுகினோ பவந்து”

॥ ஶ்ரீ குருப்யோ நமஃ ॥

॥ ஶ்ரீமஹாபெரியவா திருவடிகளே சரணம் ॥

நித்தியமும் கைங்கர்யம்
ஶ்ரீமஹாபெரியவா நித்ய கைங்கர்யம் ட்ரஸ்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts