Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ● ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். ● 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. ● 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். ● 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். ● 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். ● 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். ● 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். ● 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. ● 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ● ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். ● 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

August 15, 2026

Vasthra Dhanam

வஸ்திரதான கைங்கர்யம்-2026 ஸ்ரீமஹாபெரியவா,ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி & ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடன் தீபாவளி திருநாளை நாம் சிறப்பாக கொண்டாட இருக்கிறோம்.. இந்த மகிழ்வான பண்டிகை காலத்தில் ஆலயத்தில் நித்திய பூஜை செய்து வரும் அர்ச்சகர்கள்,வைதீகர்கள்,ஆலய கைங்கர்யம் செய்திடும் அடியார்கள் என அவர்களுக்கும் ஒரு சிறிய உபகாரமாய் பண்டிகை நாளன்று உடுத்தி மகிழ நம்மால் ஆன ஒரு சிறு வஸ்திர கைங்கர்யம். பெரியவா அனுக்கிரத்துடன் ஒவ்வொரு வருடமும் இக் கைங்கர்யத்தை ஆத்மார்த்தமாக செய்து வருகிறோம்..இந்த ஆண்டும் இதே போன்று வழங்க ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகம் நம் பாக்கியம்.” இதன் பலன் :- இறை சேவை செய்யும் அவர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் நாம் வழங்கும் ஒரு உடை ஒரு சின்ன மகிழ்வை கொடுக்கும்…ஏன் இவர்களில் ஒருவராக அந்த இறைவனும்,அம்பாளும் நம்மிடம் வாங்கி உடுத்தி மகிழலாம்… 2026 ஆம் ஆண்டு வஸ்திர கைங்கர்யம் உத்தேச திட்டம்.. ஸ்வாமி வஸ்திரம் 9 X 5 = 150 அம்பாள் வஸ்திரம்: 6 கஜம் புடவை = 150, ஆலய அர்ச்சகர்கள் 9 x 5 வேஷ்டி 9 yards புடவை = 150 நம் கைங்கர்ய அடியார்கள் 8 முழம் வேஷ்டி -150 + புடவை 150 கிராம கோவில் பூசாரிகள் வேஷ்டி + துண்டு =150 ( காவி வேஷ்டி ) இவற்றின் “மதிப்பு 6 வரை லட்சம் ரூபாய் ஆகும் என எதிர்பார்க்கிறோம்”..வஸ்திர தான கைங்கர்யத்தில் பெரியவா பக்தர்கள் எப்போதும் போலவே இந்த ஆண்டும் பங்கெடுக்க விரும்புகிறோம்.. வஸ்திரமாக வழங்கிட விரும்பும் பக்தர்களுக்கு சிறு விண்ணப்பம்:- “கொடுக்கும் தானமே கொடுப்பவரின் மனதை/அன்பை நிச்சயிக்கும்”…வஸ்திரம் “நாம் உடுத்துவதை போன்றே இருப்பது சிறப்பு…உடுத்தி மகிழ்வதை விட பார்த்ததும் மகிழ்ச்சி கண்ணில் தெரியும்.. நம் கைங்கர்ய வஸ்திரம் பெற வேண்டும் என்றே பலர் ஆவலுடன் காத்திருப்பர்.. இதுவரை அப்படியே பெரியவா அனுக்கிரகமாக.. “ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் வஸ்திர தானம் வழங்கிட பாக்கியம் பெற்ற பெரியவா பக்தர்கள்”பங்கெடுக்க தொடர்பு கொள்ளவும்..

Read More

NOVEMBER 2020

2020- கார்த்திகை மாத அனுஷ ஶ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் மதுரையில் ஒர் தனியார் கம்பெனியில் வேலை செய்து தற்போது ஒம்சக்தி ஆலயத்தில் பூஜை செய்யும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள  ராமசுப்ரமணியன் அவர்களது மகளின் திருமணத்திற்கு நம் ஸ்ரீமஹாபெரியவா ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் சார்பாக பெங்களூர் ஸ்ரீசுந்தரேசன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சார்பாக இன்று காஞ்சிபுரம் மஹாபெரியவா அதிஷ்டானத்தில் ஸ்ரீமாங்கல்யம் வழங்கப்பட்டது.. பின்னர் தேனம்பாக்கம் அழைத்து சென்றோம்..  ஸ்ரீபால பெரியவா அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்…அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம்.. எல்லாம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகமே. சென்னையை சேர்ந்த பாக்கியலட்சுமி மகள் மளாவிகா அவர்களின் திருமணத்திற்கு நாகபட்டினம் வெங்கட்ராமன் அவர்கள் ஸ்ரீமாங்கல்யம் வழங்கினார்கள்.

Read More

Latest Posts

Power of Presence

immerse yourself in the gentle embrace of full mindfulness.