Adi Puram
ஆடிப்பூரத் திருவிழா
ஶ்ரீமஹாபெரியவா அவர்களின் அனுக்கிரஹத்துடன், நித்தியமும் கைங்கர்யம் – ஶ்ரீமஹாபெரியவா நித்ய கைங்கர்யம் டிரஸ்ட் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரத் திருவிழா சிதிலமடைந்து வழக்கமான வழிபாடுகள் இல்லாமல் இருந்தும் தற்போது நித்திய பூஜை நடைபெற்று வரும் ஆலயங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. எங்கள் நோக்கம் ஒரு விழாவை நடத்துவது மட்டுமல்ல; ஒரு உயர்ந்த தர்ம எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதே.
ஒவ்வொரு ஆலயத்திலும் இறையருள் மலரட்டும்
பெரிய, புகழ்பெற்ற ஆலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்து உற்சவங்களும், சிறிய மற்றும் சிதிலமடைந்த புராதணமான ஆலயங்களிலும் நடைபெற வேண்டும் என்பதே நித்தியமும் கைங்கர்யம் இயக்கத்தின் இலட்சியம். இறைவன் ஒரு ஆலயத்தில் மட்டுமே இருக்கிறார் என்பதல்ல; எந்த ஆலயத்தில் அருள்பாலித்தாலும் அவர் அதே பரம்பொருளே. பக்தியுடன் வழிபடும் அனைவருக்கும் அவர் அருளை வழங்குகிறார்.
கிராமத்தின் ஆன்மிக வாழ்வு
பல சிறிய ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறாததால், அந்த ஊர் மக்களும் இளைய தலைமுறையும் ஆலயத்துடன் கொண்டிருந்த ஆன்மிகத் தொடர்பை இழந்து வருகின்றனர். ஒரு திருவிழா நடைபெறும்போது, மக்கள் மீண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள்; குழந்தைகள், இளைஞர்கள், குடும்பங்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள்; கிராமத்தின் ஆன்மிக வாழ்வு மீண்டும் உயிர் பெறுகிறது.
அந்த மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும். இதுவே எங்கள் கைங்கர்யத்தின் உண்மையான நோக்கம்.அதுவே அந்த ஆலயம் மீண்டும் சிதிலமடையாமல் இருக்கும்..
ஒவ்வொரு இதயத்திலும் இறைநம்பிக்கை
ஆடிப்பூரம் போன்ற தெய்வீக உற்சவங்களை இத்தகைய ஆலயங்களில் நடத்துவதன் மூலம், இறைவழிபாடு தொடர்ந்து வளரவும், ஆலயங்கள் மீண்டும் பக்தர்கள் நிறைந்த திருத்தலங்களாக மாறவும் நாம் சிறு முயற்சி செய்து வருகிறோம்.
இந்த தர்மக் கைங்கர்யத்தில் தங்களின் பங்களிப்பையும் இணைக்க விரும்பும் பக்தர்கள், தங்களால் இயன்ற அளவில் பொருளாதாரமாகவோ, பொருட்களாகவோ அல்லது நேரடியாக கைங்கர்ய சேவையிலோ பங்கேற்கலாம்.
“ஒவ்வொரு ஆலயத்திலும் நித்திய பூஜை… ஒவ்வொரு திருவிழாவும் மக்களின் பங்கேற்புடன்… ஒவ்வொரு இதயத்திலும் இறைநம்பிக்கை…” – இதுவே நித்தியமும் கைங்கர்யம் இயக்கத்தின் உயர்ந்த இலட்சியம்.