Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

ஆலயம் தோறும் அனுஷம்

ஶ்ரீமஹாபெரியவா அவர்களின் அனுக்கிரஹத்துடன், நித்தியமும் கைங்கர்யம் – ஶ்ரீமஹாபெரியவா நித்ய கைங்கர்யம் டிரஸ்ட் சார்பாக, நித்திய பூஜை நடைபெற்று வரும் சிதிலமடைந்த மற்றும் ஆதரவு குறைந்த ஆலயங்களில், ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திர நாளில் “ஆலயம் தோறும் அனுஷம்” என்ற பெயரில் ஶ்ரீமஹாபெரியவாவிற்கான சிறப்பு பூஜை, பாராயணம், அர்ச்சனை மற்றும் பிரசாத விநியோகம் பக்தி சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. அனுஷம் என்பது ஶ்ரீமஹாபெரியவா அவர்களின் ஜென்ம நட்சத்திரம். அந்த நாளில் மகாபெரியவாவை நினைத்து வழிபடுவது, குருபக்தியை வளர்க்கும் அரிய வாய்ப்பாகும். அவர் அருளிய தர்மம், வேதம், ஆலய வழிபாடு, சமய ஒற்றுமை மற்றும் கைங்கர்ய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த கைங்கர்யத்தின் முக்கிய நோக்கமாகும்.




இன்றைய காலத்தில் பல சிறிய ஆலயங்களில் பக்தர்களின் வருகை குறைந்து வருகிறது. இதனால் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறைகிறது. இதை மாற்றுவதற்காகவே ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திரத்தில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஒரு ஆலயத்தில் அனுஷ பூஜை நடைபெறும்போது, அந்த ஊர் மக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ஆலயத்திற்கு வருகிறார்கள். மகாபெரியவாவின் அருள்வாக்குகளைக் கேட்கிறார்கள். ஆலய வழிபாட்டில் பங்கேற்கிறார்கள். இதன் மூலம் இறைபக்தி, குருபக்தி மற்றும் தர்ம சிந்தனை இயல்பாக வளர்கிறது. ஒரு நாள் நடைபெறும் இந்த வழிபாடு, பலரது வாழ்க்கையில் ஆன்மிக மாற்றத்திற்கான விதையாக அமைகிறது



இந்த கைங்கர்யத்தின் மற்றொரு முக்கிய நோக்கம், ஆலய அர்ச்சகர்களுக்கு உறுதுணையாக இருப்பதாகும். அனுஷ பூஜையால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும்போது, அர்ச்சனை, பூஜை மற்றும் காணிக்கைகள் மூலம் அன்று அர்ச்சகருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு சிறிய ஆதரவாக அமைகிறது. ஆலயம் வளரும் போது அர்ச்சகரும் வளரவண்டும்; அர்ச்சகர் வளரும் போது ஆலய வழிபாடும் சிறக்கும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது. நித்தியமும் கைங்கர்யம் இயக்கத்தின் இலட்சியம், பெரிய ஆலயங்களில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சிறிய ஆலயத்திலும் மாதந்தோறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்பதாகும். அதுவே ஆலயங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதுவே மக்களின் இறைநம்பிக்கையை வளர்க்கும். அதுவே தர்மத்தை தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும்.





இந்த “ஆலயம் தோறும் அனுஷம்” கைங்கர்யத்தில் தங்களின் பங்களிப்பையும் இணைத்து, ஒரு ஆலயத்தில் பக்தி வளரவும், ஒரு அர்ச்சகரின் வாழ்வில் நம்பிக்கை மலரவும், ஒரு கிராமத்தில் ஆன்மிக ஒளி பரவவும் அனைத்து பக்தர்களையும் அன்புடன் அழைக்கிறோம். “ஒவ்வொரு மாதமும் அனுஷம்… ஒவ்வொரு ஆலயத்திலும் மகாபெரியவா பூஜை… ஒவ்வொரு கிராமத்திலும் பக்தி… ஒவ்வொரு இதயத்திலும் தர்மம்…” இதுவே நித்தியமும் கைங்கர்யம் – ஶ்ரீமஹாபெரியவா நித்ய கைங்கர்யம் டிரஸ்டின் உயர்ந்த இலட்சியம்.