ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாளின் பரிபூரண அனுக்கிர க்ருபாகடாக்ஷ்த்துடன் ஹேவிளம்பி ஆண்டு மார்கழி மாதம் 29 ம் நாள் ஜனவரி 13.01.2018 அனுஷத்தன்று துவங்கியதே நமது நித்தியமும் கைங்கர்யம்.
கால தேச மாற்றங்களால் உலகின் பல பாகங்களிலும் தங்களின் வாழ்வை அமைத்து கொண்டாலும் வாழும் தேசங்களின் கலாச்சார / வழிபாடு வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் ஒன்றாக இணைக்க அனைவருக்கும் ஒர் அடிநாதமாக இருப்பது குரு பாதமே...பரம்பொருளின் மறுசொருபமாக விளங்கும் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா என்ற கருணாமூர்த்தியே..
உலகமெங்கும் உள்ள பெரியவா பக்தர்களான நம் எல்லோரையும் "ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவா" என்ற ஒர் (வாட்சாப்) குழு மூலம் ஒன்றிணைத்து நம் மூலம் பல கைங்கர்யங்களை செய்வித்து கொண்டு இருக்கிறார் நமது கருணாமூர்த்தி ஸ்ரீமஹாபெரியவா..
அதில் ஒர் அங்கமாக "நித்தியமும் கைங்கர்யம்"
*எந்த ஒரு கைங்கர்யமும் எளிமையாக எல்லோருக்கும் வசதியாக இருந்தால் அந்த கைங்கர்யத்தை தொடர்ந்து செய்திட இயலும் என்பது ஸ்ரீமஹாபெரியவா வாக்கு..அதன்படி அவர் நமக்கு தந்த எளிமையான கைங்கர்யமே
"நித்தியமும் கைங்கர்யம்-நித்தியமும் ஒரு ரூபாய்"
ஸ்ரீமஹாபெரியவா கைங்கர்யத்திற்கு நாம் நித்தமும் 1 ரூபாய் வழங்கினால் போதும் 1 x 30 = மாதம் 30 ரூபாய் என்று வங்கி கணக்கில் செலுத்தினால் போறும், 30 ரூபாய் ஒரு நபருக்கு என்று வழங்கலாம் அல்லது ஒர் குடும்பத்திற்கு என்று வழங்கலாம்.
தங்களின் விருப்பம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம்.*
ஸ்ரீமஹாபெரியவா எங்களுக்கு நிறைய அனுக்கிரகம் செய்துள்ளார்...எனவே மாதம் 30 ரூபாய் என்ன அதற்கு மேலும் எங்களால் அனுப்ப இயலும் என்றாலும் அனுப்பலாம் அது தங்களின் விருப்பமாக ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகமே.
தங்களுக்கு என்ன கொடுத்து இருக்கிறார் என்பதும், தங்களிடம் இருந்து என்ன பெறலாம் என்பதும் அவரது அனுக்கிரகமே...
நித்தியமும் ஒரு ரூபாய் மாதம் 30 ரூபாய் என்பது அனைவரும் ஸ்ரீமஹாபெரியவா கைங்கர்யத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கமே.
தாங்கள் ஒரே தவணையாக 360/- வருட சந்தா போல் செலுத்த கூடாது அப்படி செலுத்தினாலும் அதுவும் அந்த மாதத்திற்கு மட்டுமே...ஏனெனில் நாம் மாத மாதம் கைங்கர்யத்தை தொடர்ந்து செய்தாக வேண்டும்..
நம் மாதந்திர செலவில் முதல் செலவு ஸ்ரீமஹாபெரியவா கைங்கர்யத்திற்காக இருக்கட்டுமே...
ஸ்ரீமஹாபெரியவா கைங்கர்யம் நித்தியமும் பண்ணனும் மனசில இருக்கிறவா அனைவரும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
இக் கைங்கர்யத்தின் மூலம் தமிழகத்தில் மிகவும் பழமையான ஆலயங்களுக்கும், வருமானமே இல்லாத அர்ச்சகர்களுக்கும்,வேதபாட சாலை குழந்தைகள் உணவுக்காகவும்,கோசாலை பசுக்களுக்கும் மாத மாதம் ஒர்தொகை வழங்கப்படும்
- # தமிழ்நாட்டில் எங்கோ ஒர் கிராமத்தில் நித்திய வழிபாடு இன்றி இருக்கும் ஒர் ஆலயத்தில் உங்களது கைங்கர்யத்தால் இருள் அகன்று தீபம் ஏற்ற ஒளி பிரகாசிக்க இறைவன் உங்களின் வாழ்வை ஒளி பிராகாசிக்க செய்வார்.
- # இன்று தன் வாழ்வாரத்திற்கு கூட போதிய வருமானம் இல்லாத சூழலிலும் கூட தாம் பூஜை செய்யும் இறைவனுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாது என்று ஆத்மார்த்தமாக நித்தியபூஜை செய்யும் கிராமபுற ஆலய அர்ச்சகர்களுக்கு உங்களின் ஒரு ரூபாய் மூலம் அவரின் ஜீவனத்திற்கு பங்கெடுக்க உள்ளிர்கள்.
- # இந்த லோகம் என்றும் சுபிட்ஷமாக இருக்க இவ்வூலகில் உள்ள அனைவருமே க்ஷேமத்திற்கு வேதம் மட்டுமே என்று தன் வாழ்வையே வேதத்திற்கு தந்து வேதம் கற்கும் வேத பாடசாலை குழந்தைகளுக்கு தாங்களே தங்களின் ஒரு ரூபாயைக் கொண்டு நித்தமும் உணவளிக்க போகிறிர்கள்.
- # அன்னைக்கு நிகராக தாய் பாலுக்கு சமமாக நமக்கு நித்தமும் தன் உதிரத்தை பாலாக தருவது பசுவே..ஆகவே பசுவை நாம் தாய் போல் காக்க வேண்டும்...கோ கைங்கர்யம் பற்றி பெரியவா நிறைய சொல்லி உள்ளார் அதன்படி பசுக்களை வைத்து செயல்படும் கோசாலை பசுக்களுக்கு தங்களின் ஒரு ரூபாய் மூலம் நித்தமும் உணவளிக்க முடியும்.கோசாலை பசுக்களுக்கு தங்களின் ஒரு ரூபாய் மூலம் நித்தமும் உணவளிக்க முடியும்.
நம் அன்றாட தேவைக்கு பலவற்றை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.நம்மை என்றும் இரட்ஷித்து காத்து நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நம்மை என்றும் வழி நடத்தி வரும் நம் ஜகத்குரு ஸ்ரீமஹாபெரியவா கைங்கர்யத்திற்கு நாம் நித்தமும் ஒரே ஒரு ரூபாய் வழங்கலாமே.
ஸ்ரீமஹாபெரியவா பரிபூரண அனுக்கிரத்துடன் நடைபெறும் நம் நித்தியம் கைங்கர்யம் மூலம் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆலய கைங்கர்யங்களில் நாம் அனைவரும் பங்களிக்க முடியும். இதில் முடிந்தவர் முடியாதவர் என்ற மனக்குறையே வராது. அனைவரின் ஒரு ரூபாயின் மூலம் மாத மாதம் அனைத்து கைங்கர்யங்களும் நடக்கும். இது ஸ்ரீமஹாபெரியவா நமக்கு அளித்த பரிபூரண அனுக்கிரகமே.
நித்தியமும் கைங்கர்யத்தில் இணைய விரும்பும் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகம் பெற்ற பக்தர்கள்
click to join our Nithyamum kainkaryam membership
நித்தியமும் கைங்கர்ய உறுப்பினர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ரசீதும்,பிரசாதம், ஸ்ரீமஹாபெரியவா காலண்டர் அனுப்பி வைக்கப்படும்.
ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா என்ற நமது வாட்சாப் குழுவில் இணைந்து நமது ஒவ்வொரு கைங்கர்யங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
Click Here To Join Our Sri Kanchi Maha Periyava Nithyamum Kainkaryam Whatsapp Group