..::.:.. Sri Maha Periyavar Kainkaryam Charitable Trust | About | Our Story ..:.::..
  • Office Hour: 09:00am - 5:00pm
Image Gallery

2025 Kalvi Kainkaryam

Blog Image

வித்யா தானம்- கைங்கர்யம்.

ஸ்ரீமஹாபெரியவா பாதமே ஸரணம்,  வித்யா-கல்வி கைங்கர்யம்-2025

100 ஸ்ரீமஹாபெரியவா பக்தர்களை வரவேற்கிறோம்.

"அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்,பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.  *"மகாகவி பாரதியார்"

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் 8 வது ஆண்டாக கல்வி கைங்கர்யம் சிறப்பாக செய்து வருகிறோம். வித்யா-கல்வி தானம்,வேதத்திற்கும் ஏழை குழந்தைகளின் கல்விக்கும் வழங்கி வருகிறோம்.

வேத பாடசாலை : ஒவ்வொரு வருடமும் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி பால - பெரியவா ஆக்னை படி  ,  வேதபாடசாலைகளில் வேதம் கற்று கொண்டு பள்ளி கல்வி கற்கும் வித்யார்த்திகளுக்கு அவர்களது பள்ளி கட்டணத்திற்க்கான தொகையை நம் கைங்கர்யமாக வழங்கி வருகிறோம்.

கல்வி கைங்கர்யம் : கிராமபுறத்தில்  ஏழ்மை நிலையில் உள்ள ஆலய ஆர்ச்சகர்கள், வைதிகர்கள் ஆலய பணி செய்பவர்களின் குழந்தைகளுக்கும் மேலும் நமது கைங்கர்யம் சார்பாக நித்தியபூஜை நடைபெறும் ஆலயங்கள்,  மற்றும் அந்த கிராம குழந்தைகளின் கல்விக்காக வழங்கி வருகிறோம். இதன் மூலம் அந்த குழந்தைகளிடம் ஆன்மிகத்தையும் கல்வியையும் ஒருசேர கொண்டு சேர்க்க முடியும் அதன் மூலம் அங்குள்ள ஆலயம் அடுத்த தலைமுறையினரான இன்றைய குழந்தைகள் மூலம் மீண்டும் சிதிலமடையாமல் வழிபாடுகள் தொடர இது ஒரு பக்திக்கான விதையாக இருக்கும்.

ஒர் குழந்தையின் கல்விக்கு நாம் செய்திடும் கைங்கர்யம் நம் சமயத்திற்க்கும் சமுதாயத்திற்க்கும் நாம் செய்திடும் கைங்கர்யமே

வித்யா-கல்வி கைங்கர்யத்திற்கு ஸ்ரீபெரியவா பக்தர்களில் 100 பக்தர்களை வரவேற்கிறோம்.

ஸ்ரீமஹாபெரியவா பக்தர்கள் ஒருவர் ஒரு குழந்தையின் வித்யா-கல்விக்கு 25.000 ரூபாய் வழங்கி தரலாம்..

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நாம் கல்வி கைங்கர்யத்தை துவங்குவோம்..இந்த நிதியாண்டில் வரிசெலுத்து இருப்போர் நம் கல்வி கைங்கர்யத்தில் நன்கொடை செலுத்தி 80G வரிச்சலுகை பெறலாம்.

மே/ ஜீன் மாதங்களில் பள்ளி கல்லூரி தொடங்க இருக்கும்.. ஆகவே அந்த மாதங்களில் கைங்கர்யம் சார்பாக நிதி வழங்கிட இது ஏதுவாக இருக்கும்.

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் வித்யா-கல்வி கைங்கர்யத்திற்கு தாங்கள் வழங்கும் தொகைக்கு 80G வரிச்சலுகையும் வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் நம் கல்வி கைங்கர்யத்திற்கு என்று பங்கெடுக்கும் பக்தர்கள் இந்த ஆண்டும் தங்களின் பங்களிப்பை வழங்கிட பெரியவா அனுக்கிரகம்..

இந்த வித்யா கைங்கர்யத்தில் பங்கெடுத்து கொள்ள விரும்பும் நம் பெரியவா பக்தர்கள் தொடர்பு கொள்ளவும்.  9159174455, 8428953422

"வித்யா(கல்வி)-தான கைங்கர்யம்" ஸ்ரீமஹாபெரியவா நித்ய கைங்கர்யம் சாரிடபிள் டிர்ஸ்ட்,திருச்சி- சென்னை, ஆபிஸ் போன்/வாட்சாப் : 9159174455, 9655999051*

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர* *ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

 

 

Published Date: 2025-03-12

Published By: Nithyamum Kainkaryam